உன்னை மிஸ் பண்ணுகிறேன் – கீர்த்தி சுரேஷ் உருக்கம் !!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (15:56 IST)

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்றும் தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர் நிதின். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம்

ராங் தி. இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கி அள்ளுரி இயக்கி வருகிறார்.

இப்படத்தை போவ் பிரசாத் சார்பில் பித்தரா நிறுவனம் தயாரிகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் எப்போது இப்படம் ரிலீஸாகும் எனகீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் ராங் தி படம் வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலிஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஐக்கிய அமீரகத்திலுள்ள துபாய் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஒரு நாய் பழக்கம் ஆகியுள்ளது. எப்போதும் செல்லப்பிராணிகளும் அதிக பாசம் பாராட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த நாயுடன் பாசமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீண்டும் இந்தியா திரும்பும் போது,ம் அந்த செல்லப்பிராணியைவிட்டுப் பிரிய மனமில்லாமல் அதைக் கொஞ்சிடும் புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் ஒவ்வொருமுறையும் வேலை நிமித்தம் நகரை விட்டு செல்ல நேரிடுகிறது. உன்னிடம் குட் பை சொல்லும்போதும், கடினமாகௌள்ளது.

எனது அரவணைப்பும் ஆரத்தழுவுதம்கும் நான் திரும்பிவரும்வரை…உன்னை மிஸ் பண்ணுகிறேன்…எல்லாநாளும் உன்னுடம் …உன்னை அணைகிறேன்..துபாய்..நான் மீண்டும் வருவேன் எனடு தெரிவித்துள்ளார்.

இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்