பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு… குதிரை இறந்ததால் மணிரத்னம் மீது வழக்கு!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:32 IST)
பொன்னியின் செல்வன் படப்பிடிப்புத் தளத்தில் குதிரை ஒன்று இறந்ததால் இயக்குனர் மணிரத்னம் மேல் வழக்கு தொடுத்துள்ளனர் போலிஸ்.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் ஸ்டுடியோவில் நடந்த போது படத்துக்காக பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று இறந்துள்ளது. இதையடுத்து போலிஸார் இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்