இப்போதும் வடிவேலு மீது மரியாதை உண்டு… இயக்குனர் சிம்புதேவன் நெகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:23 IST)
இயக்குனர் சிம்புதேவன் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தை தொடங்கி அது பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.

இந்நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் வடிவேலு கொடுத்த நேர்காணல்களில் இயக்குனர்கள் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் ஆகியோரை தரக்குறைவாகப் பேசி வந்தார். இப்போது எல்லா பிரச்சனைகளும் முடிந்து வடிவேலுவின் ரெட் கார்ட் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் நின்றுபோனது குறித்து இயக்குனர் சிம்புதேவன் பேசியுள்ளார். அதில் ‘சில காரணங்களால் அந்த படம் நின்று போனது. அதை பற்றி இப்போது மீண்டும் பேசவேண்டாம் என நினைக்கிறேன். இப்போதும் எனக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் வடிவேலு மீது மரியாதை உண்டு’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்