மீண்டும் சுந்தர் சி உடன் இணையும் ஹிப்பாப் ஆதி

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (14:54 IST)
மீண்டும் சுந்தர்.சி படத்துக்கு ஹிப்பாப் ஆதி இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஹிப்பாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.
 
இந்த நிலையில், தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கும் சுந்தர்.சி கூட்டணியில் நடிகர் சிம்பு இணையவுள்ளதாக கூறப்பட்டது.
 
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அனிருத்துக்கு பதிலாக ஹிப்பாப் ஆதியே மீண்டும் சுந்தர்.சி-யுடன் இணையவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
ஏற்கனவே ஆம்பள, அரண்மனை 2 ஆகிய படங்களுக்கு  ஹிப்பாப் ஆதி இசையமைத்து இருந்த நிலையில் 3வது ஆக இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்