முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் யாரும் எதிர்பாராத புதிய அற்விப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஜியோ அறிவிப்புகள் சலுகைகளை பற்றி இருக்கும் என நினைத்த நிலையில், இந்த அறிவிப்பு இதற்கு மாறானதாக இருக்கிறது.
ஆம், ஜியோ நிறுவனம் வங்கி சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, தொலைத்தொடர்பு, கேபில் டிவி, போன் தயாரிப்பு என ஈடுப்பட்டு வரும் ஜியோ அடுத்து வங்கி சேவையில் களமிறங்கவுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மைஜியோ செயலியில் எஸ்பிஐ யோனோ சேவைனையும் ஒருங்கிணைத்து வழங்க உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் இதனை வாடிக்கையாளர்களின் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.