கடவுளின் தேசம் மூழ்குது! என்ன செய்றீங்க! நடிகர் சித்தார்த் பாய்ச்சல்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (13:12 IST)
2015-ஆம் ஆண்டு தமிழகம் என்ன மனநிலையில் இருந்ததோ, அதே மனநிலையில் தான் கேரளாவும் இருக்கிறது என டுவிட்டரில் நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை வெளுத்துவாங்குகிறது. 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளச் சேதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்த வெள்ளத்தால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
அதில், தேசிய ஊடகங்களே! கேரள வெள்ளத்தின் தாக்கம் என்ன என்பது கொஞ்சமாவது உங்களுக்கு தெரியுமா? இன்னும் இது தேசிய பேரிடராக மாறவில்லை. என் இனிய கேரள மக்களே இதை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜெய்ஹிந்த்! என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ரசூல் பூக்குட்டியின் பகிர்வை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சித்தார்த்,  2015-ஆம் ஆண்டு தமிழகம் எத்தகைய கோபத்தில் இருந்ததோ, அதே மனநிலையில் தான் கேரளாவும் இருக்கிறது.
 
கடவுளின் தேசம் மூழ்கிக் கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு உதவி தேவை. தேசிய ஊடகங்கள் இன்னும் அதிகமாக கேரள வெள்ளத்தைப் பற்றிப் பேசுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்