ஹிப் ஹாப் ஆதி தனது அடுத்த படத்துக்கு சிவக்குமாரின் சபதம் என பெயர் வைத்துள்ளார்.
இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்த ஆதியை ஹீரோவாக வைத்து சுந்தர் சி மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மீசைய முறுக்கு திரைப்படத்தை ஆதியே இயக்கினார். அதையடுத்து அவர் இப்போது அன்பறிவு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பழம்பெரும் நிறுவனமான சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.
அதையடுத்து ஆதி நடிக்கும் படத்தையும் அதே நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பாக சிவக்குமாரின் சபதம் என்று பெயர் வைத்துள்ளாராம் ஆதி.