பாகுபலிக்கு பிறகு அதிக வசூல் பேட்டயா? விஸ்வாசமா?

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (13:24 IST)
இந்த வருடத்தின் முதல் இரண்டு படமே தலைவர், தல படங்கள் என்பதால் அமர்களமாக 2019 ஆரம்பம் ஆகியுள்ளது.  விஸ்வாசம், பேட்ட ஆகிய படங்கள் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியானது. 


 
பேட்ட, விஸ்வாசம் இரண்டுமே வசூலில் பட்டையை  கிளப்பியது. முதல் இரண்டு நாட்களில் ஏ சென்டர் தியேட்டர்களில் பேட்ட படமும் பி மற்றும் சி சென்டர் தியேட்டர்களில் விஸ்வாசமும் வசூலில் முதல் இடத்தை பிடித்தன.  இந்நிலையில் பாகுபலி2, 2.0 படத்திற்கு பின் சென்னையில் அமோகமாக ரஜினியின் பேட்ட தான் அதிக வசூல் செய்து வருகிறதாம். அதே நேரம் ஒட்டுமொத்தமாக பார்த்தால் பாகுபலி படத்துக்கு பிறகு விஸ்வாசம் தான்  அதிக வசூல் செய்த படம் என்று சினிமா டிராக்கர்கள் கூறுகிறார்கள். பேட்ட சென்னையில் மட்டும் தான் வசூலில் டாப் என்றும் தமிழகத்தின் மற்ற இடங்களில் விஸ்வாசம்தான் டாப் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்