என்னமா நீங்க இப்புடி பண்றீங்களேம்மா ? புருவத்தை ஷேவ் செய்த காமெடி நடிகை !

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (07:37 IST)
தமிழ் சினிமாவில் கோவை சரளாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.

ஆர்த்தியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து காமெடி செய்துவந்த மாஸ்டர் கணேஷை காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்த ஆர்த்தி அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமானார்.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்து வ்ருகின்றனர். பிரபலங்கள் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஆர்த்தி சமூகவலைத்தளங்களில் தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டு எதையாவது பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது தவறுதலாக தன் புருவத்தை ஷேவ் செய்துகொண்டதாக கூறி ஷாக்கிங்  போட்டோவை வெளியிட்டுள்ளார்.  ஆனால்,  இந்த போட்டோவை எடிட்டிங் ஆப் மூலம் அவர் அப்படி செய்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் உங்களிடம் பிடித்ததே "தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ளும் இந்த பக்குவம் தான்" அவரை  பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்