நடிகர் கமல்ஹாசன் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அவர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை விரைவில் முடிக்க உள்ள கமல் அடுத்து பிராஜக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்.
இதையடுத்து கடந்த வாரம் கமல் நடிப்பில் வினோத் இயக்கும் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. முதலில் இந்த படத்துக்காக ஹெச் வினோத் விவசாயிகள் சம்மந்தப்பட்ட கதையை சொல்லி கமல்ஹாசனிடம் சம்மதம் வாங்கியதாக சொல்லப்பட்டது. முதலில் அந்த கதைக்கு ஓகே சொன்ன கமல், இப்போது அந்த கதையில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.
மேலும் தன்னுடைய தலைவன் இருக்கிறான் கதையை சொல்லி, அந்த கதையை படமாக்கலாம் என கூறியதாகவும், இப்போது அதற்கான வேலைகளில் ஹெச் வினோத் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.