விஜய் 68 படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா…? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

புதன், 12 ஜூலை 2023 (09:42 IST)
விஜய் தற்போது நடித்து முடித்துள்ள லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய்- வெங்கட்பிரபு மற்றும் யுவன் ஷங்கர் ராஜா தவிர்த்து இந்த படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் பற்றிய எந்த விவரத்தையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்க்கவைத்துள்ளனர்.

அந்த வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வெந்து தணிந்தது காடு மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி-யைதான் வெங்கட் பிரபு இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஜெய் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்