மாவீரனில் விஜய் சேதுபதி வர காரணமாக இருந்தவர் மிஷ்கின் தானா?

புதன், 12 ஜூலை 2023 (09:27 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில்  உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக. இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். ஜூலை 14 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கு அசரீரி போல ஒரு குரல் கேட்டு, அவரை தூண்டும் விதமாக அமையுமாம். அந்த குரலால்தான் பயந்தவரான அவர் மாவீரனாக மாறுவாராம். அப்படிப்பட்ட அந்த குரலுக்கு டப்பிங் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. இதை சிவகார்த்திகேயனே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்து நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் அந்த குரலுக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேச காரணமாக இருந்தவரே இயக்குனர் மிஷ்கின்தான் என்று சொல்லப்படுகிறது. மாவீரன் படத்தில் நடித்துள்ள மிஷ்கின்தான் இந்த குரலுக்கு விஜய் சேதுபதி பேசினால் நன்றாக இருக்கும் எனக் கூறி, தானே பேசி அவரை சம்மதிக்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்