விஜய் சேதுபதியின் '50 'வது பட டைட்டில் போஸ்டர் ரிலீஸ்

புதன், 12 ஜூலை 2023 (20:59 IST)
நடிகர் விஜய்சேதுபதியின் 50 வது படத்தின்  முதல் லுக்  மற்றும் டைட்டில் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது.

விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன்.

இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருவதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதல் லுக்  மற்றும் டைட்டில் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஜா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யம், மம்தா மம்தா மோகன், நட்டி நடராஜ், அபிராமி ஆகியோர் நடிக்கவுள்ளனர். அஜனீஸ் இசையமைக்கிறார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

#VJS50 Titled #Maharaja

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்