சென்ட்டிமெண்ட் காட்சியைப் பங்கமாகக் கலாய்த்த கவுண்டமணி… இயக்குனர் பகிர்ந்த தகவல்!

Webdunia
திங்கள், 15 மே 2023 (14:31 IST)
தமிழ் சினிமாவில் 16 வயதினேலே படம் ரஜினி, கமல் மற்றும் பாரதிராஜா பல ஜாம்பவான்களை உருவாக்கியது போலவே கவுண்டமணி என்னும் நகைச்சுவை ஜாம்பவானையும் உருவாக்கியது. அதன் பின்னர் தனது உடல் மொழியாலும், கவுண்ட்டர் வசனங்களாலும் தமிழ் திரையுலகை ஆளுகை செய்ய ஆரம்பித்தார் கவுண்டமணி. 40 வயதுக்கு பின்னரே வாய்ப்புக் கிடைத்து அதன் பின்னர் அதன் மூலம் உச்சாணிக் கொம்புக்கு சென்றதில் எம் ஜி ஆருக்கும் கவுண்டமணிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.

6 ஆண்டுகளுக்கு முன்னர் கவுண்டமணி எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற படத்தில் கதாநயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒரு படத்தில் கதாநாயகனாக நடுக்கிறார். பழனிச்சாமி வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை செல்வ அன்பரசன் என்பவர் இயக்கி வருகிறார்.

கவுண்டமணி பெரிதாக ஊடகங்களில் நேர்காணல்கள் கொடுப்பதில்லை. அவரைப் பற்றி அவருடன் பணியாற்றிய சகக் கலைஞர்கள் சொன்னால்தான் உண்டு. அந்த வகையில் கவுண்டமணியோடு பல படங்களில் பணியாற்றிய இயக்குனர் சுராஜ் இருவரும் இணைந்து பணியாற்றிய கண்ணன் வருவான் படத்தில் எடுக்கப்பட்ட செண்ட்டிமெண்ட் காட்சியை கலாய்த்தது பற்றி சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் “அந்த படத்தில் கார்த்திக் வெளிநாட்டில் இருந்து வரும்போது கவுண்டமணி சிக்கன் மட்டன், நூடுல்ஸ் என சமைத்து வைத்திருப்பார். ஆனால் அவரின் பாட்டியான மனோரமா ஆசையாக பால்சோறு சமைத்திருப்பார். கார்த்தி, பாட்டி சமைத்த பால்சோறுதான் தனக்குப் பிடிக்கும் என்று சொல்லி, அதை சாப்பிடுவார். இந்த காட்சி எடுத்து முடிந்ததும் என்னை அழைத்த கவுண்டமனி ‘சுராஜ் எங்க ஊருல எல்லாம் நாய்க்குதான் ராத்திரி பால் சோறு வைப்பாங்க. நீங்க ஏன்யா உங்களுக்கு வர்றத விட்டுட்டு செண்ட்டிமெண்ட் காட்சி எல்லாம் எடுக்குறீங்க’ எனக் கலாய்த்தார்” என வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்