கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இணையும் மற்றொரு இளம் நடிகர்!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (07:17 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகையான அபிராமி இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அவர் கமல்ஹாசனுடன் கடைசியாக விருமாண்டி படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கௌதம் கார்த்திக் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்