ஜனவரி 26 ரிலீஸுக்கு தயாராகும் ஜெயம் ரவியின் பிரதர்!

திங்கள், 20 நவம்பர் 2023 (08:25 IST)
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் ’ஜேஆர் 30’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்துக்கு பிரதர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஆனால் அந்த போஸ்டர் ஒரு கொரியன் படத்தின் போஸ்டரின் அட்டைக்காப்பி என விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மீதமிருப்பதாக சொல்லப்படுகிரது.

இந்நிலையில் மீதமுள்ள ஷுட்டிங் விரைவில் முடிந்து படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்