நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் கமல் & மணிரத்னம் பட ஷூட்டிங்!

சனி, 18 நவம்பர் 2023 (07:49 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல்234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த ப்ரோமோ வீடியொவில் கமல் பேசும் வசனத்தில் “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்” என சொல்ல, ஏன் ஜாதிப் பெயரை வைத்து தொடர்ந்து கமல் படங்கள் எடுக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் எதிர் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகளைக் கடந்தும் அந்த ப்ரமோஷன் வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் 1.5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. கமல், இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக ஹெச் வினோத் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்