ப்ளூ சட்ட மாறனை எறங்கி செய்ய தோணுது..! – கடுப்பான கௌதம் மேனன்!
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (12:44 IST)
வெந்து தணிந்தது காடு குறித்த ப்ளூசட்டை மாறனின் ரிவ்யூ குறித்து இயக்குனர் கௌதம் மேனன் காட்டமாக பேசியுள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படம் பரவலாக நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. முக்கியமாக இந்த படத்தின் சிம்புவின் வித்தியாசமான நடிப்பு பலராலும் புகழப்பட்டு வருகிறது.
இந்த படத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட யூட்யூபர் ப்ளூசட்டை மாறன், படத்தை மிக மோசமாக திட்டியிருந்தது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் சிம்பு பேசிய வீடியோ ஒன்றில் உருவகேலி செய்வது தவறு என பேசியிருந்தார்.
அதை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்ட ப்ளூசட்டை மாறன், சிம்புவின் முந்தைய படங்களில் உள்ள இரட்டை அர்த்த பாடல் வரிகளை குறிப்பிட்டு காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு வெற்றி குறித்து அப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தார். அப்போது ப்ளூசட்டை மாறனின் சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பேசிய கௌதம் மேனன் “சிம்பு இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். முந்தைய படங்களில் இல்லாத அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் ப்ளூசட்டை மாறனின் விமர்சனம் மிக மோசமாக இருந்தது. நீங்க ரிவ்யூ செய்யுங்கள் ஆனால் அதை ஒருப்படத்தை இளக்காரம் செய்து செய்யாதீர்கள்.
அவரை பற்றி பேச வேண்டாம் என பலரும் ஒதுங்கி விடுகிறார்கள். ஆனால் அவர் பேசியதற்கு அவரை இறங்கி செய்துவிட வேண்டுமென தோன்றுகிறது” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.