கவனம் ஈர்க்கும் ஜி வி பிரகாஷின் ரெபல் பட டீசர் ரிலீஸ்… !

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (12:45 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர், ஜெயில், டார்லிங், அடியே, பேச்சுலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதுடன் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  சூர்யாவின் அடுத்த படத்துக்கு இசையமைப்பதன் மூலம் 100 படங்களைக் கடந்துள்ளார்.

இந்த நிலையில்,  ஜிவி.பிரகாஷ்குமார்  நடிக்கும் ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு வெளியிட்டார். இப்படத்தை  நிக்கேஷ் இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்போது ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் கொண்ட இந்த படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்