மீண்டும் சிக்கலில் ஐங்கரன் ரிலீஸ்… ஒருநாள் தாமதமாக வந்த அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (17:05 IST)
ஐங்கரன் திரைப்படம் நேற்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் தாமதமாக இன்று ரிலீஸாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன் என்ற திரைப்படம் சில ஆண்டுகளாக திரைக்கு வராமல் கிடப்பில் இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த படம் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அறிவித்தபடி கடந்த வாரம் ரிலீஸ் ஆகவில்லை. இதுபோல ஏற்கனவே சிலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐங்கரன் ரிலீஸுக்கு சிக்கலாக இருந்தது, அந்த படத் தயாரிப்பாளரின் முந்தைய ரிலீஸ்களால் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனைதான் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆனால் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பட ரிலீஸுக்கு சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு நடிகர் ஜி வி பிரகாஷ் உத்தரவாத கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னரே படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.

ஆனாலும் சொன்னபடி நேற்று இந்த திரைப்படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து பல பிரச்சனைகளைக் கடந்து இன்றுதான் ரிலீஸாகியுள்ளது. இதைப் படத்தின் கதாநாயகன் ஜி வி பிரகாஷ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்