ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன்.... தனுஷ் வெளியிட்ட ரிலீஸ் தேதி!

திங்கள், 9 மே 2022 (09:09 IST)
ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் ஐங்கரன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன் என்ற திரைப்படம் சில ஆண்டுகளாக திரைக்கு வராமல் கிடப்பில் இருக்கும் நிலையில் சமீபத்தி இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த படம் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அறிவித்தபடி கடந்த வாரம் ரிலீஸ் ஆகவில்லை. இதுபோல ஏற்கனவே சிலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது படக்குழுவினர் மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். மே 12 ஆம் தேதி ஐங்கரன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் தனுஷ் சமீபத்தில் வெளியிட்டார். ஐங்கரன் திரைப்படம் தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னர் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்