இன்று முதல் திரையரங்குகளில் தூக்கப்படுகிறதா ‘மாஸ்டர்’?

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (08:06 IST)
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த படம் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது நேற்று நள்ளிரவு முதல் இந்த படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் இனிமேல் .தியேட்டருக்கு இந்த படத்தை பார்க்க பார்வையாளர்கள் வருவது சந்தேகம் என்று கூறப்படுகிறது 
 
மேலும் இன்று முதல் திரையரங்குகளில் கே.டி.எம். அனுப்ப வேண்டாம் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறியிருப்பதாகவும் இதனால் இன்று முதல் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் இன்றைய தேதியில் மாஸ்டர் திரைப்படத்திற்கு முன்பதிவு செய்ய இணையதளங்கள் முன் வந்துள்ளன என்பதும் ஒரு சிலர் முன்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மாஸ்டர் படம் திரையரங்குகளில் ஓடுமா அல்லது தூக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்