பாட்ஷாவால் பஞ்சரான புதுப்படங்கள்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (16:19 IST)
22 வருடங்களுக்கு முன்பு வெளியான ரஜினியின் எவர் கிரீன் பாட்ஷாவால் புதுப்படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 
பாட்ஷா படத்தை தயாரித்த சத்யா மூவிஸ், 50 -வது வருடத்தை கொண்டாடும் விதமாக பாட்ஷா படத்தை டிஜிட்டலில்  மெருகூட்டி, பின்னணி இசையில் நவீனத்தை சேர்த்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். முதல் நாளிலிருந்து படத்தக்கு  நல்ல கூட்டம்.
 
சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் கமலா திரையரங்கில் முதல் மூன்று தினங்களும் அனைத்துக் காட்சிகளும்  ஹவுஸ்ஃபுல். அதேநேரம், முப்பரிமாணம், யாக்கை உள்ளிட்ட புதுப்படங்கள் பாட்ஷாவின் அளவுக்கும் வசூலிக்கவில்லையாம்.
 
பாட்ஷா பாய் ராக்ஸ்.
அடுத்த கட்டுரையில்