தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே தனது திறமையை வெளிப்படுத்தி சிறந்த தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால். அந்தவகையில் தற்போது அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கம் FIR என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விறு விறுப்பான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் , ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என மொத்தம் மூன்று ஹீரோயின்கள் வித்யாசமான ரோல்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விஷ்ணு விஷாலே தனது சொந்த நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். அஸ்வந்த் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இன்று இப்படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.