கொஞ்சும் பூரணமே "ஜானு" படத்தின் "ஊஹலே" பாடல் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (14:50 IST)
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர். 
 
அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. அதுமட்டுமின்றி சமந்தாவின் நடிப்பு தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும்  பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் "ஊஹலே " என்ற லிரிகள் வீடியோ வெளியாகி யூடிப்பில் ட்ரெண்டிங்கில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. சின்மயி - கோவிந்த் வசந்தா பாடியுள்ள இப்பாடல் வரிகளை ஸ்ரீ மணி எழுதியுள்ளார். இந்த பாடல் தெலுங்கு - தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்