"தயாரிப்பாளர் அவதாரமெடுத்த ராணா" அதுவும் தமிழ் படம், ஹீரோ யாருன்னு பாருங்க!

திங்கள், 22 ஜூலை 2019 (17:45 IST)
உலகமே வியந்து பார்த்த பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற ராணா தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாக சமீபத்திய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 


 
நடிகர் ராணா தற்போது சாய் பல்லவியுடன் சேர்ந்து புதுப்படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ராணா தனது உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். 


 
இந்நிலையில் தற்போது தெலுங்கில் நானி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த "ஜெர்சி"  படத்தை தமிழில் தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் பிரபல நடிகரான விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடிக்க அவரது மனைவியாக தெலுங்கில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் தமிழிலும் நடிக்கவுள்ளாராம்.

எனவே கூடிய விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் படக்குழுவினரிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்