இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் இருவரையும் விவாகரத்து செய்துகொண்டனர்.
பின்னர் நடிகை அமலா பாலுடன் இணைத்து விஷ்ணு விஷால் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் தோழி என கூறி நெருக்கமாக பழகி வந்தார். இந்நிலையில் தற்போது ஊரே பார்த்து வாய்பிளக்கும் வகையில் ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக புத்தாண்டு கொண்டாடி புகைப்படமெடுத்து "மை பேபி" என குறிப்பிட்டு ஜுவாலா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பார்ப்பதற்கு இருவரும் காதலை வெளிப்படுத்துவது போன்று உள்ளது.