70 சதவீதத்தை முடித்த ரஜினி – பா.இரஞ்சித் கூட்டணி

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (11:31 IST)
ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தின் ஷூட்டிங், 70 சதவீதம் முடிந்துவிட்டதாம்.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டில், சமுத்திரக்கனி, பங்கஜ் திரிபாதி என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப்  படத்தில், தனுஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
 
இப்போதுதான் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஆனால், அதற்குள் 70 சதவீத படப்பிடிப்பை  முடித்துவிட்டார்களாம். பா.இரஞ்சித் – ரஜினி சினிமா வாழ்க்கையில், மிக வேகமாக படமாக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். இடையில் பெப்சி ஸ்டிரைக் இல்லையென்றால், இன்னும் அதிகமாகப் படமாக்கியிருக்கலாம்  என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்