உலக லெவன் அணியை தோற்கடித்து தொடரை வென்றது பாகிஸ்தான்

சனி, 16 செப்டம்பர் 2017 (05:42 IST)
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது உலக லெவன் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே மூன்று டி-20 போட்டிகள் நடைபெற்றன. இதில் தலா இரு அணிகளும் ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் நேற்று நடந்த 3வது போட்டியில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது



 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 183 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய உலக லெவன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது
 
இந்த போட்டியின் நாயகனாக அகமது சேஜாட் மற்றூம் தொடர் நாயகனாக பாபர் அசாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்