சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டியிருக்க மாட்டேன்.. விஜய் ஆண்டனி மனைவியின் உருக்கமான பதிவு!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (10:42 IST)
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் விஜய் ஆண்டனி தம்பதியினருக்கு ஆறுதல்களைப் பகிர்ந்தனர்.

இந்நிலையில் இப்போது விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் உன்னை எனக்கு மிக அருகிலேயே வைத்திருந்திருப்பேன், சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டி இருக்க மாட்டேன், இப்போது உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன், நீ இல்லாமல் வாழ முடியாது, அம்மா - அப்பாவிடம் திருப்பி வந்து விடு. லாரா உனக்காக காத்திருக்கிறாள். லவ் யூ தங்கமே” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்