நாளை தியேட்டரில் ரிலீஸாகும் 9 படங்கள்

வியாழன், 5 அக்டோபர் 2023 (16:09 IST)
இந்திய சினிமாவில் தமிழில் குறிப்பிடத்தக்க அளவில் சினிமாக்கள் வாரம்தோறும் வெளியாகிறது.

அதன்படி, விஜய், அஜித், ரஜினி,கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் பண்டிகை, விழா மற்றும் விடுமுறை தினங்களில் வெளியாவது வழக்கம்.

அதேபோல் மற்ற நடிகர்கள்  சிறுபட்ஜெட் படங்கள் மற்ற தினங்களிலும், வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

அந்தவகையில் நாளை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் ஒரே நாளில் 9 படங்கள் ரிலீஸாகவுள்ளன.

அதன்படி, திரிஷாவின் தி ரோட், விஜய் ஆண்டனியின் ரத்தம், விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று, மதுர் மிரட்டலின் 900, சாட் பூட் த்ரீ ,வனிதா விஜயகுமாரின் தில்லு இருந்தா போராடு, ஆடுகளம் நரேனின் இந்தக் கிரைம் தப்பில்லை, எனக்கு என்டே கிடையாது மற்றும் என் இனிய தனிமையே ஆகிய 9 படங்கள் ரிலீஸாகவுள்ளது.

ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்