சிம்புவை கொண்டாடிய ரசிகர்கள்: எதற்காக தெரியுமா?

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (11:20 IST)
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வளம்வரும் ஒரு திறமையான நடிகர். எப்போதும் தன் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக கூறிவிடுவார். அதனாலேயே அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார் என்றே கூறலாம்.
கடந்த வருடம் அவரின் நடிப்பில் வெளியான AAA படம் தோல்வியானது. இந்நிலையில் தற்போது சிம்பு மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில்  நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பிரபல பாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் சிம்புவை கொண்டாட, அவரோ ஆனந்த கண்ணீரில் மிதந்துள்ளார். அப்போது அவர், என்னை பற்றி நிறைய பேர் தவறாக கூறியே கேட்டுவிட்டேன். திடீரென்று நீங்கள் நல்லது சொல்லும் போது கேட்பது  தாங்க முடியவில்லை என அனைவரின் முன்பும் அழுதிருக்கிறார்.
 
தங்களின் விருப்ப நாயகன் அழுததை பார்த்த சில ரசிகர்களும் கண் கலங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்