ஏர்செல் திவால்? பிஎஸ்என்எல் கொண்டாட்டம்...

புதன், 7 மார்ச் 2018 (19:47 IST)
ஏர்செல் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடி காரணமாக, ஏர்செல் நிறுவனம் திவால் என அறிவிக்க கோரி தேரிய தீர்ப்பாயத்தில் மனு வழங்கி உள்ளது. மேலும், அவரச நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. 
 
ஏற்கனவே ஆறு மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது ஏர்செல். இத்னிடையில் தமிழகத்தில் ஏர்செல் சேவை இரண்டு நாட்கல் முடங்கியது. அதன் பின்னர்தான் ஏர்செல் நிறுவனத்தின் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்தது. 

இதனால், ஏர்செல் திவால் என அறிவிக்ககோரியது, மேலும் தனது வாடிக்கையாளர்களை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ஏர்செல் எண்ணை போர்ட் செய்யும்படி அறிவுருத்தியது. போர்ட் செய்வதற்கு டிராய் கால அவகாசத்தையும் நீட்டித்து உள்ளது. 
 
இந்நிலையில், ஏர்செல் எண்ணை போர்ட் செய்யும் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 1.86 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்துள்ளனர். 
 
எனவே, போர்டபிலிட்டி கோரியிருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிக சுலபமாக பிஎஸ்என்எல் சேவையில் மாற புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்