தனுஷின் 'வடசென்னை' அட்டகாசமான பர்ஸ்ட்லுக் வெளியீடு

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (10:45 IST)
தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளியாகும் என்று தனுஷ் ஏற்கனவே தனது டுவிட்டரில் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

போலீஸ் வேனில் இருந்து தனுஷ் விலங்குடன் இறங்கி வரும் வகையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் உள்ளது. மேலும் இன்னொரு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் தனுஷ் வாயில் கூரிய கத்தி ஒன்றை வைத்திருப்பது போல் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், இந்த படத்தை பார்க்க தூண்டுவதுபோல் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மூன்று பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்