பிரபல திரைப்பட இயக்குநர் தியாகராஜன் மரணம்

Webdunia
ஞாயிறு, 1 ஜூலை 2018 (18:46 IST)
பிரபல திரைப்பட இயக்குனரும் சின்னப்ப தேவரின் மருமகனுமான ஆர்.தியாகராஜன் இன்று காலமானார். 
திரைப்பட இயக்குனர் ஆர்.தியாகராஜன் ரஜினி, கமலை வைத்து திரைப்படங்களை எடுத்துள்ளார். ரஜினியின் ரங்கா, அன்னை ஓர் ஆலயம் கமல்ஹாசனின் ராம் லக்ஷ்மனன், தாய் இல்லாமல் நான் இல்லை படங்களை இவர் இயக்கியுள்ளார்.
 
தியாகராஜனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை தயாரித்த சின்னப்ப தேவரின் மருமகன். தியாகராஜனின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்