திருமாவளவனுக்கு நன்றி கூறிய பிரபல நடிகர்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (15:07 IST)
அருள்நிதி  நடிப்பில் உருவாகியுள்ள படம் கழுவேத்தி மூர்க்கன். இப்படத்தை ராட்சசி படத்தை இயக்கிய சை கவுதமராஜன் இயக்கியுள்ளார்.
 

இப்படத்தில், ஹீரோயினாக துஷாரா நடிக்கிறார். சாயாதேவி, பிரதாப் சாயா, முனிஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் நிலையில், டி.இமான் இசையமைக்கிறார். கடந்த 19 ஆம் தேதி இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படம்  மே 26  ஆம் தேதி  தியேட்டரில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கழுவேத்தி மூர்க்கன்   படத்தில்  முக்கிய வேடத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடித்திருந்தார்.

இப்படத்தைப் பார்த்த விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தன் டுவிட்டர் பக்கத்தில்,

#கழுவேத்தி_மூர்க்கனைக் கண்டேன். இயக்குநர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன். சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன  நெறிகளைத் தகர்ப்பவன்.  நட்புக்காக உயிரையே கொடுப்பவன். நச்சரவான் எனில் தந்தையாயினும் தூக்கிலேற்றுபவன். அதிகாரவெறி ஆணவத்தைக் கழுவேற்றிக் கழிசடை சக்திகளுக்குப் பாடம் கற்பிப்பவன். சட்டம்-ஒழுங்கு எனும் பெயரால் எப்போதுமே ஆதிக்க வெறியர்களைக் பாதுகாக்கும் காக்கி அதிகாரிகளால் களப்பலி ஆனவன்.

'பிறப்பொக்கும்' என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியை பெருங்குரலெடுத்துப் பேசுபவன்.

இயக்குநர் கௌதமராஜூக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள். என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு நடிகர் சந்தோஷ் பிரதாப் தன் டுவிட்டர் பக்கத்தில்  திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்