’களவாணி ’நடிகர் ரவுடிஸம் : போலீஸுக்கு பயந்து தலைமறைவு ?

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (15:28 IST)
தெலுங்கு நடிகரை தாக்கியதாக நடிகர் விமலை கைது செய்ய போலீஸார் முயற்சி செய்தனர். அனால் அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன் நடிகர் குடி போதையில் அவரது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நடிகர் அபிஷேக்கை தாக்கியதாகத் தெரிகிறது. 
 
இதனைத் தொடர்ந்து அபிஷேக் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
இந்த புகார் தொடர்பாக நடிகர் விமல் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல்,ஆகிய பிரிவுகளின் கிழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 
 
இதனையடுத்து  விமலிடம் விசாரிக்க போலிஸார் முடிவு செய்தனர். ஆனால் நான் பின்னால் வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்,
 
போலீஸாரின் விசாரணைக்கு பயந்துதான் நடிகர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகிறது.  அவரது அலைபேசியும் ஸ்ட்ச ஆஅப் செய்யப்பட்டுள்ளதால் போலிஸார் விமலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்