முன்னாள் கேப்டனின் காதலியான டாப்ஸி

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (16:06 IST)
நடிகை டாப்ஸி தமிழ், தெலுங்கையும் தாண்டி தற்போது பாலிவுட்டில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் பாலிவுட்டில் கடைசியாக வந்த பிங்க், நாம் ஷபானா போன்ற அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் டாப்ஸி அடுத்து சூர்மா என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன்  சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படுகின்றது. இதில் அவரின் காதலியாக நடிக்கிறார் டா[ப்ஸி.
 
இப்படத்தினை ஷாத் அலி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் முடிவடைந்துள்ள நிலையில் வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஜுன் மாதம் படம் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்