பாகுபலி நாயகியை விட அதிக சம்பளம் வாங்கும் சன்னி லியோன்; எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (15:28 IST)
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாகவே மாறி விட்டார். சன்னி லியோனுக்கு தென் இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது தமிழிலும் கதாநாயகியாக  அறிமுகமாக உள்ளார். 
இந்நிலையி தெலுங்கு படம் ஒன்றில் இளவரசியாக நடிப்பதற்காக சன்னி லியோன் அதிக சம்பளம் கேட்டுள்ளார். போரில் வீர தீர செயல்கள் செய்த இளவரசி ஒருவரின் கதை தெலுங்கில் படமாக்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில்  இளவரசியாக நடிக்க சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ளனர். வடிவுடையான் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த  ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.
 
இளவரசியாக நடிக்க சன்னி லியோன் ரூ. 3.5 கோடி சம்பளம் கேட்டாராம். ரூ.3.5 கோடி அதிகம் என்றாலும் சன்னிக்கு இருக்கும் மவுசு மற்றும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸாவதை மனதில் வைத்து அவர் கேட்டதை கொடுக்க சம்மதித்துள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்