ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஞாயிறு, 5 நவம்பர் 2017 (17:27 IST)
கடந்த சில நாட்களாக மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 8 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் அரை இறுதிச் சுற்றில் ஜப்பான் அணியை 4-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இன்று இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்த்து விளையாடியது


 


இன்றைய போட்டியில் இரு அணி வீராங்கனைகளும் கடுமையாக சாம்பியன் பட்டத்திற்காக போராடியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்தது. இரு அணிகளும் மாறி மாறி கோல் போட்டு கொண்டே வந்ததால் சாம்பியன் பட்டம் பெறும் அணி எது என்று கணிக்க முடியாத நிலை இருந்தது

இருப்பினும் இந்திய வீராங்கனைகள் கடைசி வரை மனம் தளராது உறுதியுடன் விளையாடியதால் இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்த வெற்றியின் மூலம் மகளிர் உலகக் கோப்பைக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்