தினமும் எட்டு காட்சிகள்: வலிமை படக்குழுவினர் திட்டம்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (20:43 IST)
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் தினமும் 8 காட்சிகள் திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
பொதுவாக பெரிய நடிகர்களின் படம் என்றால் அதிகாலை 4 மணி காட்சி முதல் தொடங்கும் என்பது தெரிந்ததே
 
ஆனால் வலிமை திரைப்படம் நள்ளிரவு ஒரு மணி காட்சி முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது 
 
ஒரு மணி, நான்கு மணி, ஏழு மணி, 10 மணி, ஒரு மணி, நான்கு மணி, ஏழு மணி, 10 மணி என ஒரு நாளைக்கு எட்டு காட்சிகள் வீதம் பொங்கல் விடுமுறை முடியும் வரை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இதற்கான அனுமதி பெறவும் படக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்