விஜய் சேதுபதியின் "மாமனிதன்" அசத்தலான டீசர் ரிலீஸ்!

திங்கள், 6 டிசம்பர் 2021 (17:31 IST)
விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் அசத்தலான டீசர் ரிலீஸ்!
 
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். ஏற்கனவே விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான தர்மதுரை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மாமனிதன் படமும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு முதன்முறையாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
 
மாமனிதன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் டீசர் சற்றுமுன் யூடியூபில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. சாதாரண ஆட்டோ ஓட்டும் மனிதனாக மனைவி, பிள்ளைகள் என சிறிய உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மாமனிதன் விஜய் சேதுபதிக்கு இப்படம் வெற்றி பெற வெப்துனியா சார்பில் வாழ்த்துக்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்