ஆனந்தம் விளையாடும் வீடு’ டிரைலர் ரிலீஸ்!

திங்கள், 6 டிசம்பர் 2021 (19:44 IST)
ஆனந்தம் விளையாடும் வீடு’ டிரைலர் ரிலீஸ்!
கௌதம் கார்த்திக், சேரன், சரவணன் உள்பட பலர் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் ரிலீஸாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
கௌதம் கார்த்திக், சரவணன், சேரன், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தரராஜா, சிங்கம்புலி, மௌனிகா, மதுமிதா உள்பட பலர் நடித்த திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு
 
5 அண்ணன் தம்பிகள் கொண்ட இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்கி உள்ளார் என்பதும் சித்து குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குடும்பத்தின் பாசப் பிணைப்புடன் உள்ள இந்த படத்தின் கதை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் டிரைலர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் கலந்து உள்ள இந்த ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்