ரஜினி என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா?... சிகிச்சை அளித்த மருத்துவர் பகிர்ந்த தகவல்!

vinoth
வியாழன், 3 அக்டோபர் 2024 (07:40 IST)
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் இருந்து செல்லு தமனியில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கத்தீட்டர் சிகிச்சை மூலமாக ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவனையில் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினியை பரிசோதித்த இதயவியல் மருத்துவர்களில் ஒருவரான சொக்கலிங்கம் ரஜினியின் உடல்நிலை பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “ ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். ஐசியுவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டு விட்டார்.  நான் அவரிடம் ‘எல்லோரும் உங்களைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சொன்னேன்.

அதற்கு அவர் “நான்தான் நல்லா இருக்கேனே? அதை நீங்களே மக்களிடம் சொல்லிவிடுங்கள் என்று என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். உடனே ஷூட்டிங் போகலாமா என்று கேட்டார். ஆனால் மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்