தமிழில் அறிமுகமாகும் தனுஷின் மலையாள ஹீரோ

Webdunia
வியாழன், 25 மே 2017 (15:22 IST)
தனுஷ் தயாரிக்கும் மலையாளப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் டோவினோ தாமஸ், தமிழிலும் ஹீரோவாக அறிமுகமாகிறார்.


 

‘ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர்’ என்ற சாதனைக்கு சொந்தக்காரர் பி.ஆர்.விஜயலட்சுமி. இயக்குநர், தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலுவின் மகள் இவர். பாக்யராஜின் ‘சின்ன வீடு’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர், பிறகு சத்யராஜ், விஜயகாந்த், பிரபு என 80களின் முன்னணி நடிகர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். அத்துடன்,  எஸ்.பி.பி. மற்றும் ரகுமான் இணைந்து நடித்த ‘பாட்டு பாட வா’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

அதன்பின்னர் எந்தப் படத்திலும் பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தவர், 22 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குநராக எண்ட்ரி கொடுக்கிறார். மலையாள நடிகரான டோவினோ தாமஸ் ஹீரோவாக தமிழில் அறிமுகமாகும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பியா பாஜ்பாய் நடிக்கிறார். அருண் டோமினிக் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துவரும் மலையாளப் படத்தை, தனுஷ் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்