போராடிவரும் விவசாயிகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஆதரவு !!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:09 IST)
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருவதுவதற்கு இயக்குநர் வெற்றிமாறன் ஆதரவு  தெரிவித்துள்ளர்.

டெல்லியில் நுழையமுடியாதபடி ஆணித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து பிரபல பாட பாடகி ரிஹானா, ‘’டெல்லியில் மனித உரிமை மீறல்… புதுடெல்லியில் இணையத்தொடர்ப்புகள் துண்டிக்கப்பட்டதா? நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன்… டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி ஏன் நாம் பேசவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.  .
 
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தலைவி பட நாயகி, கங்கனா, அவரை முட்டாள் எனக்கூறியதுடன், அவர்கள் விவசாயிகள் அல்ல, நாட்டைத்துண்டாட முயல்கிற தீவிராவதிகள் எனக் கூறினார்.
 
இவரது கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியதுடன் பெரும்சர்ச்சையை உருவாக்கியது.
இருப்பினும்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தில்  நடித்து வரும் கங்கனா ரனாவத்திற்குப் பதிலான ரிஹானாவை நெட்டிசன்கள் தலைவி என்று ஹேஸ்டேக் உருவாக்கிப் பாராட்டினர்.
 
2 மாதங்களாக  டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருவது ரிஹானாவின்ட்வீட்  மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினப் பெண் ஒருவர் இன்று இரண்டாவது நாளாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இதுகுறித்துக் கருத்துக் கூறியுள்ளார்.
 
அதில், மக்களால்தான் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அரசு மக்களின் நலனைத்தான் காக்க வேண்டுமே தவிர காப்பரேட் நிறுவனங்கள் அல்ல…விவசாயிகள் தேசத்தின் நலன்களைக் காக்க முயற்சி செய்கிறார்கள்.. அவர்கள் உரிமைக்காகப் போராடுவதும் போராட்டத்தை ஆதரிப்பதும் ஜனநாயம் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்