இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் சாலை விபத்தில் மரணம்!

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (07:55 IST)
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது படங்களின் மூலம் கவனம் பெற்று வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இந்நிலையில் அவரது உதவி இயக்குனர் சரண் ராஜ் என்பவர் நேற்று முன் தினம் இரவு சென்னையில் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் உதவி இயக்குனராகவும், துணைக் கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார் சரண்ராஜ். நேற்று முன் தினம் தனது இருசக்கர வாகனத்தில், சென்னை கே கே நகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது,  கார் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.

காரை ஓட்டிவந்த பழனியப்பன் என்பவர் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்