‘அஜித் கூட படமா…?’ குருதி ஆட்டம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் அளித்த பதில்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (15:44 IST)
8 தோட்டக்கள் மற்றும் குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருதி ஆட்டம் திரைப்படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீகணேஷ் இயக்க, ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் சில ஆண்டுகளுக்கே முன்பே முடிந்துவிட்டாலும் பல பிரச்சனைகளில் சிக்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிலீஸாகிறது. இது சம்மந்தமாக இயக்குனர் ஸ்ரீகணேஷ் உருக்கமாக பேசி இருந்தார்.

இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர்கள் அவரிடம் “நீங்கள் அஜித்தோடு இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறதே… அது உண்மையா?” எனக் கேட்க, அதற்குப் பதிலளித்த ஸ்ரீகணேஷ் “நன்றி… அதை பற்றி இப்போது எதுவும் பேச முடியாது. சீக்கிரமே படம் பற்றிய அப்டேட் சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்