இந்தி படத்தில் தமிழராக விஜய் சேதுபதி… மெர்ரி கிறிஸ்துமஸ் படம் பற்றி வெளியான தகவல்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (15:37 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் முக்கிய அப்டே ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்  ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்க உள்ளது. இதற்கான ஒத்திகையில் ஸ்ரீராம் ராகவன், காத்ரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் தமிழ் பேசும் நபராகவே விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவரின் உரையாடல்களை காத்ரினா கைஃபுக்கு மொழி பெயர்த்து சொல்லும் கதாபாத்திரத்தில் நடிகை தீபா வெங்கட் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்