இயக்குனர் ஷங்கரை வம்புக்கு இழுத்த பிரபல இயக்குனர்

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (13:27 IST)
இந்திய சினிமாவின் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் '2.0' . பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2.0 முப்பரிமாண (3டி) ,  மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் வரும் நவம்பர் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
 
இந்நிலையில் பிரபலங்களை  அடிக்கடி வம்பிழுக்கும் சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா ஷங்கரை  வம்பு இழுத்துள்ளார்.
2.0 உடன், ராம்கோபால் வர்மா தயாரித்த 'பைரவா கீதா' படம் ரிலீஸாகவுள்ளதால், ஷங்கரை கிண்டல் செய்து அவர் ஒரு டிவிட் செய்துள்ளார்.
 
அதில் ‘குழந்தைகள் பார்க்கும் படத்தை பெரிய இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார், ஆனால், பெரியவர்கள் பார்க்கும் படத்தை இளம் இயக்குனர்(பைரவா கீதா இயக்குநர்) எடுத்துள்ளார்’ என கிண்டல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்